மயிலாடுதுறை கோயிலில் பரவசத்துடன் வழிபாடு செய்த தைவான் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2023 03:12
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகள் ஓளிலாயம் 18 சித்தர்களின் பீடம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.இந்நிலையில் உலக நன்மை வேண்டி 18 சித்தர்கள் ஒளிலாயத்தில் சிறப்பு ருத்ர மகா யாகம் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் அருண் கணேஷ் குருக்கள் தலைமையில் 48 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 மூலிகைகள் கொண்டும் 48 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ருத்ர மகா யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒளிலாயத்தில் அருள்பாளிக்கும் 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த ருத்ர மகா யாகத்தில் தைவான் நாட்டை சேர்ந்த வெளிநாட்டவர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செல்வ முத்துக்குமரன், செந்தமிழ் செல்வன், மாமல்லன், பரதன் ஆகியோர் செய்து இருந்தனர்.