அவிநாசி விநாயகர், முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2023 03:12
அவிநாசி; அவிநாசியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், கருமபாளையம் ஊராட்சி செம்பாக்கவுண்டன்பாளையம் பகுதி பட்டறை பஸ் ஸ்டாப்பில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருத்வம் தியாகராஜ குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், கலாகர்ஷணம், வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் முதற் கால யாக வேள்வி பூஜை நடைப்பெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று புண்யாக வாசனம், பூர்ணாஹீதி, யாத்ரா தானத்துடன் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செம்பாக்கவுண்டன் பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.