குளமான குறுக்குத்துறை முருகன் கோயில்; கருவறை வரை சென்ற வெள்ளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2023 04:12
திருநெல்வேலி; திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை முழுவதுமாக மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் வெள்ள நீர் கருவறை வரை சென்றுள்ளது. எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை.