அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை பிரதோஷம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2023 06:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.