பிரம்மாண்ட தூண்களும், நடுவில் ராமர் பீடமும்; பிரமிக்க வைக்கும் அயோத்தி ராமர் கோயில் கருவறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2023 08:12
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாக மேற்பார்வை செய்து வருகிறது. தற்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் விழா ஜனவரி 22, 2024-ல் நடைபெற உள்ளது, விழாவில் பிரதமர் மோடி மற்றும் நாடு முழுவதிலும் இருந்து 10,000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் கோயில் கருவறை புகைபடங்களை ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைபடத்தில் கருவறையின் உள்பகுதி வட்ட வடிவில் பிரம்மாண்ட தூண்களும், நடுவில் ராமர் சிலையை வைக்கப்பட உள்ள பீடமும், அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளில் ராமர் சிலை ஒளிரும் வகையில் அழகுற காட்சியளிக்கிறது. இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.