பதிவு செய்த நாள்
30
செப்
2023
03:09
அயோத்தி; பிரமாண்ட அயோத்தி ராமர் கோவிலில் 12 மணி நேரத்தில் 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்யலாம் என கட்டுமானக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தியின் மூன்றடுக்கு ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. இந்நிலையில் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் இக்கோயிலில் 12 மணி நேரத்திற்குள் 75 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.