பதிவு செய்த நாள்
30
டிச
2023
09:12
அயோத்தி: பிரமாண்ட அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி முடிடையும் நிலையில் உள்ளது. வரும் ஜன.20 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கருவறைக்குள் அடுத்த மாதம் நிறுவப்படும் ராம் லல்லா சிலையை முடிவு செய்வதற்கான அறக்கட்டளையின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இது குறித்து ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் அறங்காவலர் பிம்லேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா கூறுகையில்; ராம் லல்லா சிலைக்கான தேர்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலை அடுத்த மாதம் பிரான் பிரதிஷ்டைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமை, அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் கூறுகையில்; மூன்று வடிவமைப்புகளில் ஐந்து வயதுடைய ராம் லல்லாவைப் பிரதிபலிக்கும் 51 அங்குல உயரமுள்ள ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்படும். இந்த ராமர் சிறந்த தெய்வீகத்தன்மையும், குழந்தை தோற்றமும் கொண்டவர் என்று அவர் கூறினார். கும்பாபிஷேகம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இறுதி நாளில் பூஜைக்குப் பிறகு மதியம் மிருகசிரிச நட்சத்திரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். தற்போதே அயோத்தி நகர் விழா கோலம் பூண்டுள்ளது.