தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது. இன்று தர்மபுரி செந்தில் நகர் அருகே உள்ளது வெண்ணங்குடி முனியப்ப சாஸ்தா கோயில்.
தர்மபுரி நகரை காக்கும் காவல் தெய்வமாக எல்லையை காக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு முனுசாமி என்னும் பக்தரால் உருவாக்கப்பட்ட கோயில் இது. மூன்று தலைமுறைகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நித்ய பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி, வளாகத்தில் வேல் கம்பத்தில் பூட்டுகளை கட்டி விட்டு செல்கின்றனர். குடும்ப பிரச்னை அகல கோயில் முன் உள்ள வேலின் முன் உப்பை கொட்டுகின்றனர். தண்ணீரில் உப்பு கரைவதை போல அவர்களது குறைகளும் கரையும். மேலும், திருமணம், குழந்தைபேறு, தொழிலில் மேன்மை, வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்கு முன் நிற்கிறார் முனியப்ப சாஸ்தா. விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தர்மபுரியில் இருந்து சேலம் சாலையில் 8 கி.மீ., நேரம்: காலை 6:30 - 12:30 மணி மாலை 4:00 - 7:00 மணி தொடர்புக்கு: 82200 70708