பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இங்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்தது. பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முருகன் கோயில் செல்ல வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். அருள்ஜோதி வீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, கிரிவிதி ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. திருஆவினன்குடி கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது.