பதிவு செய்த நாள்
15
டிச
2023
09:12
திருச்சி; 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் திருமொழித்திருநாள் மூன்றாம் திருநாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் சென்னியோங்கு பாசுரத்திற்கு ஏற்ப ,கல் இழைத்த நீண்ட நேர் கிரீடம் அணிந்து, வைரக் கல் அபய ஹஸ்தம், மகர கர்ண பத்திரம், நாச்சியார் திருமொழிக்கு ஏற்ப தாயார் பதக்கம், சிகப்புக்கல் தாமரை பதக்கம், வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திரகலை , காசு மாலை, இரட்டை வட முத்துமாலை, அடுக்கு பதக்கங்கள் அணிந்து, சிகப்பு கல் திருவடி சாற்றி, பின் சேவையாக - புஜ கீர்த்தி, பருத்தி பூ பதக்கம் அணிந்து, பச்சை பட்டு உடுத்தி சேவை சாத்தித்தார்.