பதிவு செய்த நாள்
15
டிச
2023
06:12
மேட்டுப்பாளையம்; வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், பகல் பத்து உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் 3 ம் நாளில் கோவில் நடை திறந்து, அதிகாலையில் மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. ரங்கமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். வருகிற, 22ம் தேதி இரவு அரங்கநாத பெருமாள், மோகன அவதாரத்தில் எழுந்தருள உள்ளார். 23ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று இரவு, 11:00 மணிக்கு திருவாய்மொழி திருநாள் எனும், ராபத்து உற்சவம் துவங்குகிறது. 30ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவமும், ஜன., 1ம் தேதி திருவாய்மொழி திருநாள், சாற்று முறையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.