Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி பிறப்பு; திருப்பாவை பட்டில் ... ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்; நந்தகோபன் குமரன் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் சேவை ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்தம் சென்றது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்தம் சென்றது

பதிவு செய்த நாள்

17 டிச
2023
07:12

திருக்கோவிலூர்; கள்ளக்குறிச்சி மாவட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்த கலசம் அனுப்பும் வைபவம் நடந்தது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் இருந்து தீர்த்தம் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்தக்கலசம் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு சந்தப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அட்சதை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இரட்டை விநாயகர், கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, கே.பி.என்., திருமண மண்டபத்தில் 27 கலசங்களில் வைக்கப்பட்டது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் தொழிலதிபர் முரளி, அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, பா.ஜ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமை தாங்கி, கலசத்தில் தீர்த்தம் ஆவாகனம், அர்ச்சனை செய்து ஹிந்து முன்னனி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமாரிடம் வழங்கினார். திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஹோமம், தீபாராதனையை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தின் யதீஸ்வரி சச்சிதானந்தப்ரியா அம்பா அவர்கள் அயோத்தி குழந்தை ஸ்ரீ ராமர் அட்சதை கலசத்தை முக்கியஸ்தர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar