பழநியில் அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2023 10:12
பழநி; பழநியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ராமர் கோயில் அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழநியில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமஜென்ம பூமியில் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அயோத்தயில் இருந்து அர்ச்சதை பிரசாதம் கொண்டுவரப்பட்டது. அதன் பின் அயோத்தி வாருங்கள் என்று அழைப்புகள் மற்றும் கோயிலின் வடிவ வரைபடம் ஆகியவை ஹிந்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதற்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோமாதா பூஜை யாக பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் பக்தர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது. அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் தமிழ்நாடு பிராம. சமாஜ தலைவர் ஹரிஹரமுத்துஅய்யர், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராமகிருஷ்ணன், பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ், வி.ஹெச்.பி நிர்வாகி செந்தில் குமார், ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் பாலன், மாவட்ட துணை தலைவர் ராஜா, ஹிந்து வியாபாரிகள் நலசங்க மாவட்ட செயலாளர் ஜெகன், பிராமண சமாஜ நிர்வாகி ஹரிஹரமுத்து அய்யர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.