திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2023 10:12
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு ஆறு நாட்களாக நடந்த சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மேற்கு நோக்கு யோகநிலையில் அருள்பாலிக்கும் பைரவருக்கு ஆண்டு தோறும் 6 நாட்கள் சம்பகசஷ்டி விழா நடைபெறும். டிச.13 ல் யோகபைரவர் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் ஆதீனகர்த்தர் குன்றக்குடி அடிகள் முன்னிலையில் அஷ்டபைரவர்யாகத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை,மாலை இருகால அஷ்டபைரவ யாகம் நடந்து மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்து சிறப்பு அலங்காரங்களில் யோகபைரவர் அருள்பாலித்தார். இன்று காலை 9:30 மணிக்கு யாகம் துவங்கி 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலை5:30 மணிக்கு மீண்டும் அஷ்ட பைரவர்யாகம் நடந்து மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று விழா நிறைவடைந்தது. யாகசாலை பூஜைகளை கணேஷ், பாஸ்கர், ரமேஷ், பாபு, சிவக்குமார், ஜவஹர் சிவாச்சார்யர்கள் செய்தனர். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்கின்றனர்.