பதிவு செய்த நாள்
19
டிச
2023
08:12
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பகல் பத்து திருமொழித்திருநாள் ஏழாம் நாளான இன்று காலை உற்சவத்தில் அர்ஜுன மண்டபத்தில் முத்து ஆண்டாள், கொண்டை அணிந்து, பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் இருபுறமும் தாயார் - நாச்சியார் பதக்கம்; ரங்கூன் அட்டிகை, சந்திர வில்லை, கல் இழைத்த ஒட்டியாணம், அரைச் சலங்கை , அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 2 வட முத்து மாலை, வைர அபய ஹஸ்தம்;, மகர கர்ண பத்ரம் அணிந்து, பின் சேவையில் சிகப்பு கல் பதக்கம், புஜ கீர்த்தி அணிந்து, வெளிர் பச்சை நிற பட்டு உடுத்தி சேவை சாத்தித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.