சனிப்பெயர்ச்சி ; விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2023 05:12
புதுச்சேரி ; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள நவகிரக கோவிலில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். இங்கு, நாளை 20ம் தேதி நடக்க உள்ள சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், தோஷ நிவர்த்திகள், பரிகாரங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி முன்னிட்டு இன்று விஸ்வரூப பஞ்சலோக சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.