பதிவு செய்த நாள்
21
டிச
2023
11:12
பெ.நா.பாளையம்; அயோத்தி ராமர் கோவில் அட்சதை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், பக்தர்களுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ராமர் கோவில் அட்சதை, நாடு முழுவதும், பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை வடக்கு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சூலூர், கூடலூர், காரமடை, எஸ்.எஸ்.குளம்., அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ராமர் கோவில் அட்சதை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. பெரியநாயக்கன்பாளையத்திற்கு வழங்கப்பட்ட அட்சதைகளை, பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க அட்சதைகளுடன், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கலக்கப்படுகிறது. இதற்காக, பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மஞ்சளுடன் பெருக்கப்பட்ட அட்சதைகள் சிறு, சிறு பாக்கெட்டுகளில் போடும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் ராமர் கோவில் அட்சதை, பொதுமக்களுக்கு வழங்கும் பணி துவங்கும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.