பதிவு செய்த நாள்
22
அக்
2012
10:10
நெட்டப்பாக்கம்: மணக்குப்பம் செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. வில்லியனூர் கொம்யூன் மணக்குப்பம் கிராமத்தில் உள்ள செல்வ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, வரும் 29ம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது. 27ம் தேதி மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்பாலங்காரம், முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. 28ம் தேதி காலை 6.30 மணிக்கு இரண்டாம் காலை யாகபூஜை, காலை 8 மணிக்கு நாடி சந்தானம், காலை 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, காலை 8.45 மணிக்கு கலச புறப்பாடு, 9 மணிக்கு கும்பாபி ஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.