பிரதோஷம், கார்த்திகை விரதம்; சிவன், முருகன் வழிபாடு சிறப்பை தரும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2023 09:12
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவனை வழிபடுவர். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. இன்று சிவனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். இன்று சிவன், முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.