Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமண தடை நீக்கும் ரேணுகா எல்லம்மா ... நாகதோஷத்தை போக்கும் சிவாஜி நகரின் நாகம்மா நாகதோஷத்தை போக்கும் சிவாஜி நகரின் ...
முதல் பக்கம் » துளிகள்
குழந்தை வரம் அளிக்கும் பெருமாள் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் அளிக்கும் பெருமாள் கோவில்

பதிவு செய்த நாள்

17 நவ
2026
10:11

பெங்களூரு சித்தேஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ய வெட்கடரமணா சுவாமி கோவில், வெங்கடேஸ்வர பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.

இது, சவுந்தர்ய கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. உடுப்பி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளின் அருளாசியுடன், கடந்த ஆண்டு மே மாதம் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா விமரிசையாக நடந்தது.

தாசரஹள்ளி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பக்தர்களுக்கு முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது. இந்த கோவில் மங்களூரில் உள்ள கோவில்களை போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் மேற்பகுதி ஓடுகளாலும், ஆங்காங்கே துாண்களும் உள்ளன.

கோவிலுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய கொடிக்கம்பம் வரவேற்கிறது. இங்குள்ள அமைதியான சூழல், ஆன்மிக சிந்தனைகளை அதிகப்படுத்தும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்கப் படும். துளசி, பழம், தேங்காய் கொண்டு சென்று, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

இக்கோவிலின் மூலவர் வெங்கடேஸ்வர பெருமாள், திருப்பதி ஏழுமலையான் போல காட்சி அளிக்கிறார். காலை 6:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல், இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், இசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் நடக்க கோரியும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த பூஜையில் பங்கேற்றவர்களுக்கு விரைவில் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


எப்படி செல்வது?

பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து 251 -‘ஜி’ என்ற பஸ்சில் பயணிப்பதன் மூலம் சப்தகிரி கல்லுாரியை அடையலாம். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

ரயில்: பெங்களூரில் எப்பகுதியில் இருந்தாலும் மெட்ரோ ரயில் மூலம் ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தை வந்தடையலாம். அங்கிருந்து 253- ‘சி’ என்ற பஸ்சில் பயணிப்பதன் மூலம் சப்தகிரி கல்லுாரியை அடையலாம். அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள நாகம்மா கோவில், பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இங்கு குடி ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா காந்தனகுன்டே கிராமத்தில், ஸ்ரீரேணுகா எல்லம்மா தேவி ... மேலும்
 
temple news
* ஹிந்து மதத்தின் ஆணிவேராகத் திகழும் கோயில்களுக்கு தினமும் செல். * குடும்பக் கடமையை விட்டு விட்டு சமூக ... மேலும்
 
temple news
* உண்மையான சந்தோஷம் பெற கடவுளைச் சரணடைவதே வழி.  * தர்மம் செய்வதன் மூலம் மனம் துாய்மையாகும். * கடவுளிடம் ... மேலும்
 
temple news
இன்று (நவ.15) கந்தசஷ்டிவாழ்வு இனிக்க...சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறியே முருகனின் பிறப்புக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar