Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வரம் அளிக்கும் பெருமாள் ...
முதல் பக்கம் » துளிகள்
நாகதோஷத்தை போக்கும் சிவாஜி நகரின் நாகம்மா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகதோஷத்தை போக்கும் சிவாஜி நகரின் நாகம்மா

பதிவு செய்த நாள்

17 நவ
2026
10:11

பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள நாகம்மா கோவில், பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இங்கு குடி கொண்டுள்ள நாகம்மாவுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

பெங்களூரு சிவாஜி நகரின் வீரப்பிள்ளை வீதியில், நாகம்மா கோவில் அமைந்துள்ளது. சிவாஜி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.  இவர்கள் நாகம்மாவின் பக்தர்கள். இவர்களின் ஒத்துழைப்பில், கோவில் பராமரிக்கப்படுகிறது. கோவிலில் இயற்கையாக உருவான புற்று உள்ளது. இதனால், இங்கு குடி கொண்டுள்ள அம்பாளுக்கு, நாகம்மா என பெயர் வந்துள்ளது.


அமாவாசை


ஆதிசக்தியின் அம்சமாகவும், மக்களின் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் தொலைவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். புற்றுக்கு பால் ஊற்றுகின்றனர்.

இங்கு குடிகொண்டுள்ள அம்பாளை தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக நாக தோஷங்கள் நீங்கும். திருமண தடை நீங்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள் மறையும்.


சக்தி வாய்ந்த அம்மன் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கோவிலில் நடக்கும் திருவிழாக்கள், மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில் நாகபஞ்சமியை முன்னிட்டு, பிரம்ம ரத உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். மஹா சண்டி ஹோமம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.


நவராத்திரி


நவராத்திரி விழாவில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இதை பார்ப்பதற்கு காண கண்கோடி வேண்டும்.

நாக தோஷம் நீங்கவும், திருமண தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் நாக பிரதிஷ்டை செய்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர்.

ஆரம்ப நாட்களில் மிக சிறிதாக இருந்த கோவில், இப்போது பெரிதாக கட்டப்பட்டுள்ளது. சனீஸ்வரன், ஆஞ்சநேயர் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. சனிக்கிழமைகளில் இங்கு அதிக பக்தர்கள் வருகின்றனர்.


எப்படி செல்வது?


பெங்களூரின் மிகவும் பழமையான பகுதியான சிவாஜிநகரில், நாகம்மா கோவில் அமைந்துள்ளது. பெங்களூரின் மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், கோரமங்களா, இந்திரா நகர் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும், சிவாஜிநகருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆட்டோ, வாடகைக்கார் வசதியும் உள்ளது. சிவாஜிநகர் பஸ் நிலையத்தில் இறங்கி, நடந்தே கோவிலுக்கு செல்லலாம். மெட்ரோ ரயிலில் எம்.ஜி.சாலைக்கு வந்து, அங்கிருந்து ஆட்டோ, வாடகைக்காரில் கோவிலுக்கு செல்லலாம்.

அருகில் உள்ள கோவில்கள்: ஒடுக்கத்துார் முருகன் கோவில், ரேணுகா பரமேஸ்வரி கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், ஓம் சக்தி கோவில், படவேட்டம்மன் கோவில், முத்தாலம்மன் கோவில், சோமேஸ்வரர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், தர்மராஜா கோவில், ராமர் கோவில்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு சித்தேஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ சவுந்தர்ய வெட்கடரமணா சுவாமி கோவில், வெங்கடேஸ்வர ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா காந்தனகுன்டே கிராமத்தில், ஸ்ரீரேணுகா எல்லம்மா தேவி ... மேலும்
 
temple news
* ஹிந்து மதத்தின் ஆணிவேராகத் திகழும் கோயில்களுக்கு தினமும் செல். * குடும்பக் கடமையை விட்டு விட்டு சமூக ... மேலும்
 
temple news
* உண்மையான சந்தோஷம் பெற கடவுளைச் சரணடைவதே வழி.  * தர்மம் செய்வதன் மூலம் மனம் துாய்மையாகும். * கடவுளிடம் ... மேலும்
 
temple news
இன்று (நவ.15) கந்தசஷ்டிவாழ்வு இனிக்க...சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறியே முருகனின் பிறப்புக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar