* ஹிந்து மதத்தின் ஆணிவேராகத் திகழும் கோயில்களுக்கு தினமும் செல். * குடும்பக் கடமையை விட்டு விட்டு சமூக சேவையில் ஈடுபடாதே. * உன் ஊரிலுள்ள சிறிய கோயில்களுக்கு முடிந்ததை செய். * மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு நஷ்டம் இல்லை, நமக்குத் தான் நஷ்டம். * எளிமையை பின்பற்றினால் பொருளுக்காக அலைய வேண்டியதில்லை. * சிறிய செயலாக இருந்தாலும் அதை அக்கறையுடன் செய். * ‘பிறரை விட நமக்கு அதிகம் கிடைக்க வேண்டும்’ என நினைக்காதே. * குழந்தையின் மனதில் பக்தியை விதைத்திடு. அது என்றாவது முளைக்கும். * இம்மைக்கும், மறுமைக்கும் தேவையான செயல்களைச் செய். * தர்மமே உன் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும். * ஒவ்வொருவர் மனதிலும் கடவுள் குடி கொண்டிருக்கிறார். * எப்போதும் கடவுளின் திருநாமத்தை சொல். நிம்மதியாக வாழலாம். * பேச்சில் கட்டுப்பாடு இல்லையேல் பிரச்னை உருவாகும். * அறிவு, அழகு, பணம் இவற்றில் எது இருந்தாலும் அதை எண்ணி கர்வப்படாதே. * எந்த ஒரு இக்கட்டான சூழலிலும், செய்த தர்மம் உன்னை காப்பாற்றும். * எதுவும் நம் கையில் இல்லை. கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்திடு.