திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம் உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2023 10:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையையே சிவ பெருமானாக நினைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மாதந்தோறும் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பவுர்ணமி, 25ம் தேதி நள்ளிரவு, 12:30 மணிக்கு தொடங்கி, 26ம் தேதி இரவு, 11:55 மணிக்கு முடிகிறது. இந்த நேரமே, பக்தர்கள் கிரிவலம் செல்ல, உகந்த நேரமென்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.