ஆருத்ரா தரிசனம்; உலகின் மிகப்பெரிய நடராஜருக்கு அதிகாலை முதல் அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2023 10:12
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் கோனேரிராஜபுரம் கிராமம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் திருநல்லம் என்று அழைக்கப்பட்ட இங்கு தேவாரப் பதிதம் பெற்ற பழைமை வாய்ந்த உமாமகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சோழர் கட்டடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் தனி சன்னதியில் 8.5 அடி உயரம் கொண்ட உலகில் மிகப் பெரிய பஞ்சலோக நடராஜர் திருமேனி அமைந்துள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத திருவாதிரையை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தணம் சாத்தப்பட்டு, மகாதீப ஆராதனை நடைபெற்றது தொடர்ந்து நடராஜ பெருமாளுக்கு ஆபரணங்கள், ருத்ராட்ச மாலை, புலித்தோல், பட்டாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர். இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.