Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை; ... மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; முன்பதிவு குறைப்பு! மகர விளக்கு கால பூஜைகளுக்காக ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சரணகோஷத்துடன் சபரிமலையில் மண்டல காலம் நிறைவு; 30ல் மீண்டும் நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
சரணகோஷத்துடன் சபரிமலையில் மண்டல காலம் நிறைவு; 30ல் மீண்டும் நடைதிறப்பு

பதிவு செய்த நாள்

28 டிச
2023
07:12

சபரிமலை, சபரிமலையில் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல காலத்தின் நிறைவாக நேற்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் இடைப்பட்ட முகூர்த்தத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்திய பின்னர் தங்க அங்கு அணிவித்து சிறப்பு பூஜை நடத்தி மண்டல பூஜையை நிறைவு செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6:30 க்கு தீபாராதனை நடைபெற்ற பின்னர் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9:மணிக்கு அத்தாழ பூஜை நிறைவு பெற்று 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி ஐயப்பன் விக்ரகத்தை திருநீறாலல் மூடி யோக நிலையில் அமர்த்திய பின்னர் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 30 மாலை 5:00 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. 31அதிகாலை 3:30 மணிய முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். 15-ல் மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. 20 வரை பக்தர்களுக்காக நடை திறந்திருக்கும்.21 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும்.

வருமானம் அதிகரிப்பு: சபரிமலை வருமானம் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு ,நேற்று 18.72 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது. குத்தகை ஏல வருமானத்தையும் சேர்த்து இந்த மண்டல காலத்துக்கான மொத்த வருமானம் 241 கோடியே 72 லட்சத்தி 22 ஆயிரத்து 711 ரூபாய். கடந்த ஆண்டு இது 222 கோடியே 98 லட்சத்தி 70 ஆயிரத்து 250 ரூபாயாக இருந்தது இதன்படி 18. 72 கோடி அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
 தேனி; சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என ... மேலும்
 
temple news
சபரிமலை; பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இன்று மாலை 4:00 ... மேலும்
 
temple news
கார்த்திகை ஒரு ஒளி மாதம். இந்த மாதத்தில் தான் சிவன் வானுக்கும், பூமிக்கும் இடையே நெருப்பு பிளம்பாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar