Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரணகோஷத்துடன் சபரிமலையில் மண்டல ... புல்மேடு வழியாக சபரிமலை சென்ற பக்தர்கள்; மண்டல கால அளவில் அதிகரிப்பு புல்மேடு வழியாக சபரிமலை சென்ற ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; முன்பதிவு குறைப்பு!
எழுத்தின் அளவு:
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு; முன்பதிவு குறைப்பு!

பதிவு செய்த நாள்

30 டிச
2023
07:12

சபரிமலை; மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. மண்டலகால அனுபவத்தின் அடிப்படையில் மகர விளக்கு காலத்தில் பக்தர்களின் எண்ணிக்கை முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 27 ஆம் தேதி மண்டல பூஜையுடன் சபரிமலையில் மண்டல காலம் நிறைவு பெற்று அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சபரிமலையில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மகர விளக்கு கால பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் மகர விளக்கு காலத்துக்கான நெய்யபிஷேகத்தை தந்திரி மகேஷ் மோகனரரு தொடங்கி வைப்பார். ஜன., 15-ம் தேதி மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. 21 காலை 7:00 க்கு நடை அடைக்கப்படும். மண்டல காலத்தில் அதிகமான முன்பதிவு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு மகர விளக்கு காலத்தில் தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜன.. 15 வரையிலான தரிசன முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த நாட்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜு கூறினார். இந்த நாட்களில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறப்பதால் 26 ஆயிரம் பேருக்கு மட்டுமே புக்கிங் வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் ஜன.,14, 15 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரம் , ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரம் என சுருக்கப்பட்டுள்ளது. மண்டல காலத்தில் பக்தர்களின் நீண்ட நேரம் காத்திருப்பு,அதனால் பக்தர்கள் ஏற்பட்ட சிரமம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மகர விளக்கு காலத்தில் தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி போலீசாருக்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar