பதிவு செய்த நாள்
29
டிச
2023
05:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் நடக்கும் ராமாயணம் சொற்பொழிவில், 10 ஆயிரம் வட மாநில பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட தென் மாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையால் டில்லி, குஜராத், பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், உ.பி., ம.பி., மகராஷ்டிரா, பீகார் சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்து உள்ளனர். இவர்கள் இங்கு 8 தனியார் மகாலில் டிச., 28 முதல் ஜன., 4 வரை நடக்கும் ராமாயணம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று அருளாசி பெற்று, தினமும் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளீதரன் செய்து வருகிறார். இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் அக்னி தீர்த்தம் கடற்கரை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்குள்ள 150 க்கு மேலான தங்கும் விடுதியில் அறைகள் புல்லாகி உள்ளதால், தமிழகம், கேரளா சுற்றுலா பயணிகள் தங்க இடமின்றி தவிக்கின்றனர்.