பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
பேரூர்: பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடத்தப்பட்டது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, 2010, நவ., 12ம் தேதி நடத்தப்பட்டது. தற்போது, பொதுமக்கள் நலன் வேண்டி, கும்பாபிஷேக இரண்டாமாண்டு விழா கோவிலில் நடத்தப்பட்டது. விநாயகபெருமான், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், பாலதண்டபாணி சுவாமி, வரதராஜ பெருமாள் ஆகிய மூர்த்திகளுக்கு, 16 வகையான விசேஷ அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. 11 கலசங்கள் வைத்து புனிதநீர் ஊற்றி, சிவயாகம், 11 கலசங்கள் பிரகாரத்தில் வலம் வந்து பட்டீஸ் வரருக்கும், பச்சைநாயகி அம்மனுக்கும் கலச தீர்த்த அபிஷேகம், சுவாமிக்கும், அம்மனுக்கும் பட்டு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. கோவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், கோவில் பணியாளர்கள் உப்பட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.