பழநி: பழநி மலைக்கோயிலில் நாளை முதல் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெற உள்ளது. நவராத்திரி விழா, பழநி கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்கி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தது. இதனால் அக்., 16 முதல் பழநி மலை கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்தது. விஜயதசமியை முன்னிட்டு அம்பு வில் போடுதல் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது. இத்துடன் நவராத்திரி விழா முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நாளை முதல் இரவு 7 மணிக்கு மலைக்கோயிலில் வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.