இன்று சங்கடஹரசதுர்த்தி விரதம்; அருகம்புல் சாத்தி விநாயகரை வழிபட நல்லதே நடக்கும்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2023 07:12
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய முக்கியமான விரதம் இந்த சதுர்த்தி விரதம். சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சகல விதமான துன்பங்கள், தோஷங்கள் விலகி வளமான வாழ்வு அமையும். முதலில் தன் தாய் பார்வதிக்கு கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது எல்லாம் இவ்விரதம் இருந்து தான். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல். அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சதுர்த்தி என்பதால் இந்த நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். இன்று விநாயகனை வழிபட வினைகள் நீங்கும்.. நிம்மதி பிறக்கும்.