பதிவு செய்த நாள்
30
டிச
2023
11:12
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையம், 15 வேலம் பாளையம், ஆத்துபாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாத்திர உற்பத்திக்கு அடுத்தபடியாக கோவிலுக்கு தேவையான பிரபா வளையம், திருவாச்சி உள்ளிட்டவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்கென சிறிய பெரிய என சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவிலை அலங்கரிக்ககூடிய பிரபா வளையம், திருவாச்சி, சிலையின் தலை பகுதியில் வைகாகப்படும் கிரிடம், கோபுரத்தின் மீது வைக்கப்படும் கும்ப கலசம், மற்றும் சிலை, கதவு நிலை, கொடி மரம், சாமியின் பாதம், முகம், ஆகியவற்றிற்கான கவசம் உள்ளிட்டவை பார்ட்டி விரும்பும் வகையில் வெள்ளி, செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிலைக்கு கவசம் செய்யும்போது, சிலையின் முன் பக்க உருவத்தை மெழுகில் அச்சு எடுத்து கொள்கின்றனர். அச்சு எடுக்கப்பட்ட மெழுகின் மீது கான்கிரிட் கலவையை பூச்சுகின்றனர். கான்கிரிட் கலவையில் அச்சு பதிந்து விடுகிறது.
நன்கு காய்ந்த பிறகு மெழுகை எடுத்து விடுகின்றனர். காய்ந்த கான்கிரிட் கலவை மீது பார்ட்டி விரும்பிய தகடு மூலம் கவசம் செய்து, பாலீஸ் செய்து, சிலைக்கு பொருத்துகின்றனர். அதுபோல், பிரபா வளையம், கதவு நிலை, கொடி மரம் ஆகியவற்றிற்கான கவசம் உளியின் மூலம் செதுக்கி பார்ட்டி பிரும்பும் டிசைனை உருவாக்கி அமைத்து கொடுக்கின்றனர். ஸ்ரீ ராயர் சிற்ப சாலை உரிமையாளர் லட்சுமி நாராயணன், கூறியதாவது : இங்கு ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆர்டர் வருகின்றன. அதிக அளவில் அம்மன், முருகன், விநாயகர், பெருமாள், ஆகிய சிலைகளுக்கு கவச ஆர்டர் வரும். தேர் அலங்காரமும் செய்து கொடுக்கிறோம். கதவு நிலை, கொடி மரம் உள்ளிட்ட வற்றிற்கு கவசம் செய்யும் போது, பார்ட்டி கொடுக்கும் டிசைன் பார்ட்டி டிசைன் கொடுக்காத பட்சத்தில் பார்ட்டி விரும்பும் வகையில் நாமே புது புது டிசைன்களை உருவாக்க கற்று கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்டர் கொடுக்க விரும்புவார்கள். இதுவரை அரை அடி முதல் அதிக பட்சமாக ஆறு அடி வரை உயரமுள்ள சிலைகளுக்கு கவசம் செய்துள்ளோம். இது ஒரு நூற்பமான தொழில் கவனமாக செய்ய வேண்டும். பட்டறை குடியிருப்பு பகுதியில் உள்ளது. உற்பத்தி செய்யும்போது, அதில் இருந்து வரும் சத்தம் குடியிருப்பு வாசிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. பட்டறை அமைக்க அரசு தனி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். இந்த கலை அழியாமல் இருக்க, புது தொழில் முனைவோரை உருவாக்க, அரசு பயிற்சி பட்டறை ஏற்படுத்து, அதனை இளைஞர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். என்றார்.