சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலில் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2024 05:01
நாகப்பட்டினம்; நாகை சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை, வெளிப்பாளையத்தில் சத்குரு சம்ஹார மூர்த்தி கோவில் அமைந்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் பீடம் முழுவதும்,500,200,100 ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கடன் பிரச்னை தீரவும், வாழ்வில் செல்வம் செழிக்கவும் வேண்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.