பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா, ஜன.19ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடைபெற விருகிறது. விழாவில் தினமும் புதுச்சேரி சப்பரம்,தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் வாகனங்களில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, புறப்பாடு நடைபெற உள்ளது.
திருவிழாவில்.. கொடியேற்றம் : 19ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம் : 24ம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் வெள்ளி ரதம் : 24ம் தேதி இரவு 09.00 மணிக்குமேல் தைப்பூசம் : 25ம் தேதி திருத்தேரோட்டம்: 25ம் தேதி மாலை 04.30 மணிக்குமேல் தெப்பத்தேர் : 28ம் தேதி இரவு 07.00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் விழா 28ம் தேதி இரவு 11.00 மணிக்கு மேல் கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.