பதிவு செய்த நாள்
04
ஜன
2024
03:01
காரைக்கால்; புதுச்சேரி மாநிலத்தில் 2024ம்ஆண்டு காலண்டரில் காரைக்கால் மாங்கனித்திருவிழா படத்திற்கு பதில் வேறுபடம் இடம்பெற்றதால் காரைக்காலை புறக்கணிப்பதாக சமுகஆவலர்கள் வேதனை.,
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மகோ, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் நடைபெறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அரசு சாதனைகள் குறித்து புதுச்சேரி அரசு சார்பில் தயாரிக்கப்படும் ஆண்டு காலண்டர் வெளியிடுவது வழக்கம். ஆனால் 2024ம் ஆண்டு அரசு வெளியிட்ட காலண்டரிடர் புதுச்சேரி அரசின் நலத்திட்டங்கள், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வெவ்வேறு சமய விழாக்கள் அனைத்தையும் விளக்கும் விதமாக வண்ணப் புகைப்படத்துடன் முதல்வர் மற்றும் கவர்னர், அமைச்சர்கள் கலந்து கொண்ட காலண்டர்கள் இடம் பெற்றுள்ளது. இதில் புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உதவிதொகை, பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மாகி ஓணம் பண்டிகை, புதுச்சேரி கலைவிழா, குடும்ப தலைவிக்கு உதவிதொகை,காவலர்களுக்கு பணி நியமன ஆணை, ஈகை திருநாள், பழங்குடியினர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், மாசிமகம், பிறந்த பெண்குழந்தைக்கு நிதியுவி உள்ளிட்ட அனைத்து புதுச்சேரி மாநில சாதனைகள் மற்றும் மாகி உள்ளிட்ட பிராந்தியங்கள் இடம் பெற்றது. ஆனால் புதிய காலண்டர் 6ம் பக்கத்தில் ஜூன் மாதத்தில் காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனித்திருவிழா புகைப்படம் இடம் பெறும் இடத்தில் புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் மாங்கனித்திருவிழா புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது வேதனைக்குறியதாக பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுக்குறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஒப்பந்தக்காரர் நலச்சங்க அமைப்பாளர் சுரேஷ் கூறுகையில்; புதுச்சேரி அரசு காரைக்காலை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஆனால் ஆண்டுதோறும் அரசு மூலம் பல லட்சம் மதிப்பில் வெளியிடப்படும் காலண்டரில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நிகழ்ச்சிகள் உள்ளது. ஆனால் காரைக்காலில் 63 நாயன்மார்களில் பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனித்திருவிழா புகைப்படத்திற்கு பதில் வேறு மாங்கனித்திருவிழா இடம்பெற்றுள்ளது. இதுவேதனைக்குறியதாகும். அரசு வெளியிடும் காலண்டர் முக்கியமானது. ஆனால் அதிகாரிகள் அலட்சியமா இல்லை காரைக்கால் புறக்கணிக்கும் நோக்கில் இந்த தவறு நடைபெற்றுள்ளதா என்று அரசு விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுகஆர்வலர்கள் பலர் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.