Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்கள் பரிதவிப்பு ; ... சபரிமலையில் மீண்டும் கட்டுக்கடங்காத கூட்டம்.. நீண்ட நேரம் காத்திருப்பு; தரிசனம் முடிக்காமல் திரும்பும் பக்தர்கள் சபரிமலையில் மீண்டும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பத்து வயதுக்குள் 50 முறை சபரிமலை பயணம்; கேரள சிறுமியின் அசர வைக்கும் ஐயப்ப பக்தி
எழுத்தின் அளவு:
பத்து வயதுக்குள் 50 முறை சபரிமலை பயணம்; கேரள சிறுமியின் அசர வைக்கும் ஐயப்ப பக்தி

பதிவு செய்த நாள்

05 ஜன
2024
08:01

சபரிமலை; கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி 50 முறை சபரிமலை சென்று ஐயப்பனை வணங்கி புண்ணியம் தேடி உள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஏழுகோனை சேர்ந்தவர் அபிலாஷ் மணி. தீவிர ஐயப்ப பக்தர். மகள் அத்ரிதி 10. இவர் 9 மாத குழந்தையாக இருந்த போது அபிலாஷ் தனது கையில் தாங்கி சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் நடத்தினார். அதிலிருந்து நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் மகளை அழைத்து சபரிமலை வந்து தரிசனம் நடத்தினார். மண்டல மகர விளக்கு காலம் மட்டுமல்லாமல் மாத பூஜை, சித்திரை விசு போன்ற எல்லா அனைத்து பூஜை காலங்களிலும் ம.களை தவறாமல் அழைத்து வந்தார். அத்ருதியும் மகிழ்ச்சியுடன் சபரிமலை பயணத்தை மேற்கொண்டார் எரிமேலியில் பேட்டை துள்ளல் இவருக்கு குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதிருதிக்கு 10 வயது முடிவுடைய ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் நேற்று முன்தினம் சபரிமலை வந்து ஐயப்பனை வணங்கினார். இது அவரது 50 - வது சபரிமலை பயணமாகும். ஐயப்பனை வணங்கிய பின்னர் சன்னிதானத்தின் முன்புறம் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட அவர், ஐயப்பனை 50 முறை கண்டு வணங்கியது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று குறிப்பிட்டார். இனி 50 வயதுக்கு பின்னர் சபரிமலையில் ஐயப்பனை வணங்க மீண்டும் வருவேன் என்று அவர் தெரிவித்தார். பொதுவாக சபரிமலையில் 18 முறை வருபவர்கள் குரு சுவாமி என்று அழைக்கப்படுகிறார்கள். 18 முறை சபரிமலை வந்ததின் அடையாளமாக அந்த பக்தர் சன்னிதானத்தில் பின்புறம் உள்ள பஸ்மகுளம் அருகே தென்னங்கன்றுகளை நடவு செய்வார்கள். ஆனால் 10 வயதுக்குள் 50 முறை சபரிமலை வந்து தரிசனம் நடத்தி உள்ளது பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்ரிதி ஏழுகோன் ஸ்ரீ நாராயண குரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar