ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு 1000கி.மீ ஐயப்பன் ரதத்துடன் நடந்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2024 02:01
கூடலுார்; ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் ஐயப்பன் ரதத்துடன் 18 பக்தர்கள் நடந்து வந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பகுடிபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து குருசாமி ஈரையா தலைமையில் நவ. 18ல் அங்கிருந்து நடைப்பயணம் கிளம்பினர். ஐயப்பன் ரதத்தை இழுத்துக் கொண்டு ஆயிரம் கி.மீட்டருக்கு மேல் நடைபயணமாக இன்று கூடலுார் வந்தடைந்தனர்.
குருசாமி ஈரையா கூறும்போது: கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்பன் ரதத்துடன் நடை பயணமாக சபரிமலைக்கு வருகிறோம். இந்த ஆண்டு 18 பேர்களுடன் மகரஜோதி விழாவில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக கடந்த 47 நாட்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறோம். வழிநெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் ஐயப்பன் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். இரவு நேரங்களில் மட்டும் ஆங்காங்கே உள்ள கோயில்களில் தங்குவோம். வாகனங்களில் வெளியேறும் புகையால் மாசு ஏற்படுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வாகவும் இப் பயணம் உள்ளது. மேலும் உடல் நலத்திற்கும் பயனுள்ளதாகும். சபரிமலையில் தரிசனம் முடிந்து ஜன. 16ல் வாகனம் மூலம் ஆந்திரா செல்வோம், என்றார்.