தேவகோட்டை; தேவகோட்டை அருகே சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேரோட்டம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும். இந்த தேரோட்டத்தில் வடம் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் தேரோட்டம் நடத்தவில்லை. சில ஆண்டு தேர் ஓடியது. சில ஆண்டுகள் ஓட வில்லை. தேர் பழுது பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்து அறநிலையத்துறை ஏற்பாட்டில் புதிய தேர் செய்து முடித்து சில ஆண்டுகள் ஆனாலும் தேரோட்டம் நடக்கவில்லை. இது தொடர்பாக கோர்ட்டுக்கு சென்றனர். தேருக்கு சில மாதங்களுக்கு முன் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டது. தேரை பொறுத்தவரை அனைத்து பணிகளும் முடிவடைந்தது. வரும் ஆனிமாதம் திருவிழாவில் தேர் ஓட வேண்டும் என்றால் தேர் வெள்ளோட்டம் நடத்த வேண்டும். ஐகோர்ட் வெள்ளோட்ட தேதியை முடிவு செய்ய உத்தரவிட்டது. ஒரு கட்டத்தில் நீதிபதியை நானே துணை ராணுவ உதவியோடு ஓட்டவா என கேள்வி எழுப்பினார். கோர்ட் உத்தரவை தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் தேர் தொடர்பான அனைத்து மக்களிடமும் பேச்சு நடத்தி சுமூகமாக முடிவு காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் வரும் ஜன. 21 ந்தேதி கண்டதேவி தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேவகோட்டை, கண்டதேவி, பகுதி மக்கள் தேர் வெள்ளோட்டம் காண ஆவலாக இருந்தனர். இந்நிலையில் புதிய தேர் வழக்கமான இடத்த்திலிருந்து. சற்று தள்ளி செய்து நிறுத்தி இருந்தனர். வழக்கமான இடத்தில் தேரை நிறுத்த முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை தேருக்கு மாலை அணிவித்து வழிபாடு நடத்தி, கழற்றி வைக்கப்பட்டு இருந்த ஹைட்ராலிக் பிரேக்கை மீண்டும் பொருத்தி புதிய தேரை வழக்கமாக சுவாமி ஏற்றும் கருப்பர் கோயில் அருகே இழுத்து நிறுத்தி பிரேக் போட்டு தேரை நிலை நிறுத்தினர்.போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி தேர் 10 அடி நகர்ந்தது. வெள்ளோட்டம் சுமூகமாக நடக்கும் என அதிகாரிகள் அப்பகுதியினர் நம்பிக்கை தெரிவித்தனர்.