Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டதேவி கோயில் புதிய தேர் நிலைக்கு ... காரமடையில் 11 ஆயிரம் வீடுகளுக்கு அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ் காரமடையில் 11 ஆயிரம் வீடுகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் ஆதியோகி ரதயாத்திரை கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவையில் ஆதியோகி ரதயாத்திரை கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2024
06:01

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து, மஹா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரையை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார்.

கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களை அழைக்கும் வகையில், ஆதியோகி ரத யாத்திரை துவக்க விழா நேற்று முன்தினம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஈஷா சம்ஸ்கிருதி ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். தொடர்ந்து கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், ஆதியோகி ரதயாத்திரையை துவக்கி வைத்தார்.ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள், தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 20 ஆயிரம் கி.மீ., தூரம் வரை பயணிக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதியோகிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். ஒவ்வொரு ரதமும், ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின், மஹா சிவராத்திரி அன்று, கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடைய உள்ளது. இவ்விழாவில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில்," இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடி சென்று வணங்குவது. மற்றொன்று, இறைவன் நமக்காக வீதிகள் தோறும் வந்து அருள் பாலிப்பது. அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை, அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு, தமிழகமெங்கும் வலம் வர இருக்கிறது. சிவபெருமானுக்குரிய மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை, போற்றி வழிபாடு உள்ளிட்டவைகளோடு வலம் வர இருக்கிற ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவம் இன்று சிறப்புடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவள்ளூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளம் மழை நீர் சேகரிப்பால் நிறைந்து ... மேலும்
 
temple news
பிரசித்தி பெற்ற கோவில்களின் உற்சவமூர்த்திகள் படங்களுடன், பக்தி மணம் பரப்பும் மாத காலண்டரை, ஹிந்து சமய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar