காரமடையில் 11 ஆயிரம் வீடுகளுக்கு அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2024 06:01
மேட்டுப்பாளையம்; அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம் 22 ஆம் தேதி நடக்கிறது. அதற்காக நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் வீடுகளுக்கு அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ், அட்சதை வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் துணை தலைவர் விக்னேஷ் தலைமையில் பா.ஜ.,வினர் இன்று காரமடை அரங்கநாதர் கோவிலில், பக்தர்களுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ், அட்சதையை வழங்கினர். முன்னதாக கோவிலில் அழைப்பிதழ், அட்சதை பூஜை செய்யப்பட்டது. காரமடை நகர் பகுதியில் 11 ஆயிரம் வீடுகளுக்கு இந்த அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.