ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட் சார்பில் அயோத்திக்கு வாருங்கள் பாடல் வெளியீட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2024 10:01
சென்னை; தமிழ்நாடு ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட் சார்பில் தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், கிரி டிரேடிங் கம்பனியின் நிர்வாக இயக்குநர் டி.எஸ் ரங்கநாதன் இசை அமைத்து பாடிய அயோத்திக்கு வாருங்கள் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. இதில், அயோத்திக்கு வாருங்கள் தமிழ் வீடியோ பாடலை வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் வெளியிட, ஹிந்தி வீடியோ பாடலை சென்னை ஷாஸ்ன் கல்லூரி தலைவர் அபை குமார் ஜெயின் ஸ்ரீ மால் வெளியிட்டார். இந்நிகழ்வில், சின்மயா மிஷன் தலைவர் சுவாமி மித்ரானந்தா, தமிழ்நாடு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சேகர் ரெட்டி, ஆகியோர் பங்கேற்றனர்.