கொட்டும் மழையிலும் 200 கிமீ பழனிக்கு பாதயாத்திரை; பக்தர்கள் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2024 02:01
குன்னூர்; தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள், கொட்டும் மழையிலும் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடக்கும் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. 25 ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. 28ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்கின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்தும் சிறுவர்கள் முதல் இளைஞர் பெரியவர்கள் வரை விரதம் மேற்கொண்டு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையிலும் முருக பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் பாதயாத்திரை செல்கின்றனர். இங்கிருந்து 200 கிலோமீட்டர் தூரம் முருக பக்தர்கள் பக்தியுடன் பாதயாத்திரை செல்வது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.