காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2024 03:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் நேற்று கோயில் நிர்வாக அதிகாரி ராமாராவ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு முன்னிலையில் எண்ணப்பட்டது. அதில், பணம்: 1,55,21,259ரூ, தங்கம் : 43.000, வெள்ளி: கிலோ 415.400 கிராம், வெளிநாட்டுப் பணம் அமெரிக்கா: 110, மலேசியா: 15, ஜப்பான் 29, மற்றவைகள்; 18. இந்தத் தொகை 28 நாட்களில் பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.