Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களிடம் வனத்துறை கட்டணம்; ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; குவிந்த பக்தர்கள் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2024
03:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. ஜன. 21ல் தெப்பத் திருவிழா நடக்கிறது. திருவிழா துவங்கும் வகையில் நேற்று மாலையில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்துசாந்தி பூஜை நடந்தது.

கொடியேற்றம்: இன்று காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சிவிலி நாயகர் முன்பு யாக பூஜை முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு, தர்ப்பை புல், மா இலை வைத்து பட்டு துணியால் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டது. கொடிக்கம்பத்தின் அடிப்பாகத்தில் திரவிய அபிஷேகங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு: திருவிழா நடைபெறும் ஜன. 21 வரை தினம் காலையில் சிம்மாசனம், தங்கச் சப்பரம், சப்பரம், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதம். அன்னம், சேஷம். ரிஷபம், ரத்தின சிம்மாசனம், விடையாத்தி சப்பரம், புஷ்ப சப்பரம், பச்சை குதிரை, தங்க குதிரை வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.

தேரோட்டம்: திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக ஜன 20ல் தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடித்து, பதினாறுகால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.

தெப்பத் திருவிழா: ஜன. 21 காலையில் ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சுப்பிரமணிய சுவாமி மட்டும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹார லீலை நடைபெறும். கோயில் கொடியேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் கொடிப்பட்டம் யானை தெய்வானைமீது வைத்து ரத வீதிகளில் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கும். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளதால் கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar