திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு அமாவாசை சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2026 05:04
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ள்பாலித்தார். மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம், 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்டை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.