அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தும் 121 வேத பண்டிதர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 12:01
அயோத்தி ; உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அயோத்தி கோவில் கும்பாபிஷேக சடங்குகளை, 121 வேத பண்டிதர்கள் முன்னின்று செய்கின்றனர். கணேஷ்வர் சாஸ்திரி திராவிட், மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பில் விழா நடக்கிறது. காசியை சேர்ந்த லஷ்மிகாந்த் தீக்சித், முதன்மை ஆசார்யராக இருந்து விழாவை வழி நடத்துவார் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.