இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய மத நல்லிணக்க மாட்டுப்பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 02:01
மேலுார்; மேலுார், தும்பைபட்டியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு வீரகாளியம்மன் கோயிலில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து மதநல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடினர்.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு புதிய ஜவுளிகள் வாங்க கிராமத்து சார்பில் பணம் வசூலிக்கப்பட்டு இஸ்லாமிய இனத்தை சேர்ந்த தரகன் வகையறாவிடம் ஒப்படைக்கப்பட்டு ஜவுளிகள் வாங்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட ஜவுளிகள் கிராமத்து பெரியவர்கள் முன்னிலையில் பெரிய மந்தை திடலில் வைக்கப்பட்டு அனைவரும் சுவாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து தரகன் வகையறாவை சேர்ந்தவர் புதிய ஜவுளிகளை சுமந்து கொண்டு வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு புதிய ஜவுளிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் மற்றும் கோயில் மாட்டுக்கு அணிவிக்கப்பட்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. அதற்கு முன்பாக மதநல்லிணக்க பொங்கல் வைக்கப்பட்டு கோயிலில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சாமி கும்பிட்டனர். ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆண்டு தோறும் மத நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடுவதாக கிராமத்தார்கள் தெரிவித்தனர்.