மகரஜோதிக்கு பிறகும் சபரிமலையில் கூட்டம் குறையவில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2024 11:01
சபரிமலை : மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் தரிசனத்திற்கு பக்தர்களின் நீண்ட வரிசை இருந்தது. ஜன.20 வரை தரிசனம் செய்யலாம்.
சபரிமலையில் நேற்று முன்தினம் மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. மாலை பொன்னம்பலம் மேட்டில் தெரிந்த மகரஜோதியை தரிசித்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையிறங்கிய பின்னர் , பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர் . நேற்று காலையில் 18 படிகளில் ஏற சரங்குத்தி வரை வரிசை நீண்டு இருந்தது. மதியத்திற்கு பின்னர் பக்தர்களின் கூட்டம் குறைய துவங்கியது. மகரஜோதி கால நெய்யபிஷேகம் ஜன.19-ல் நிறைவு பெறும். அதன் பின்னர் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது. ஜன.20 இரவு 10:00 மணி வரைபக்தர்கள் தரிசனம் செய்யலாம். அன்றிரவு மாளிகைப்புறம்கோயிலில் குருதி பூஜை நடைபெறும். ஜன. 21 காலை 7:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மகர ஜோதி சீசன் நிறைவுறும்.