பதிவு செய்த நாள்
17
ஜன
2024
11:01
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் , காளஹஸ்தி சிவன் கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு சுவாமி, அம்பாள் கிரிவலம் வந்து அருளபாலித்தனர்.
காளஹஸ்தியில் நடைபெறவிருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் சிவ - பார்வதியின் திருக்கல்யாணத்திற்கு உறவினர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரையும் வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கைலாசகிரி பிரதக்ஷணோத்ஸவ விழா கோலாகலமாக நடைப்பெற்றது. முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளை அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தூப தீப நெய்வேத்தியம் வழங்கப்பட்டு, ஆதி தம்பதியர்கள் கிரிவலம் சென்றனர். ஊர்வலமாக பக்தர்கள் இரு வேறு சப்பரங்களில் மூன்று கோடி தேவர்களையும், முனிவர்களையும் தங்கள் திருமணத்திற்கு வரவேற்கும் வகையில் வாலிங்கேஸ்வரர் (சிவபெருமான்) கைலாசகிரி மலையை வலம் வந்தார். 21 கி.மீ., தூரம் உள்ள கைலாசகிரி மலையைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்றனர். சிவனின் வருகையால் மலைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் உற்சாகமடைந்தன. கிரிவலம் செல்லும் வழி நெடுகிலும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பல்வேறு (பகுதிகளில்) இடங்களில் பக்தர்களுக்கு தேவையான நிழற்கூடங்கள் அமைத்தும் தண்ணீர் பந்தல், நீர் ,மோர், அன்னதானம் என பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சி குறித்து கோவில் வேத பண்டிதர்கள் மாருதி சர்மா கூறுகையில்; சங்கராந்தி பண்டிகையின் போது சுவாமி அம்மையார்கள் வருடத்திற்கு இரண்டு முறை கிரி வலம் வருவது வழக்கம். இதை மகாசிவராத்திரி மஹோத்ஸவத்தின் போது திருக்கல்யாணத்திற்கு அழைப்பாக (கைலாசகிரியில் ) மலையில் உள்ள தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் உறவினர்களை செல்வதாகவும், மீண்டும் சிவராத்திரிக்குப் பிறகு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ள வரவேற்பதற்கும் கிரிவலம் செல்வது வழக்கம் என்று காளஹஸ்தி சிவன் கோயில் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் மலைகள் பரந்து விரிந்து இருப்பதால், மலையைச் சுற்றிலும் பக்தர்கள் சோர்வின்றி கிரிவலம் செல்ல பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது பக்தர்கள் வழக்கமாக்கி வருகின்றனர் என்றார். இந்த கிரிவலத்தின் போது திரளான பக்தர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.