பதிவு செய்த நாள்
17
ஜன
2024
01:01
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி உடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பிலும், ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பிலும் கலை நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
ஜீவநதி நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பில், வரும் 15ம் தேதி, மாலை 4:00 மணிக்கு சமத்துவப் பொங்கல் மற்றும் சமத்துவ கும்மி நடைபெற்றது. 16ம் தேதி மாலை 4:30 மணிக்கு, பறையிசை, பரத நாட்டியம், செண்டை மேளம், கிராமிய இசை கச்சேரி, களரி மற்றும் கம்பத்தாட்டம் ஆகியன நடைபெற்றன.
1008 பானையில் பொங்கல்; ஜீவநதி நொய்யல் சங்கம், நிட்மா, திருப்பூர் மாநகராட்சி ஆகியன இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று 17ம் தேதி, காலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. விழாவில், தொடர்ந்து 1008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், பெருஞ்சலங்கையாட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலை, 4:30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது.