அயோத்தி ராமர் கோவிலில் இன்று.. ஜல யாத்திரை, தீர்த்த பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2024 10:01
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று 18ம் தேதி ஜல யாத்திரை, தீர்த்த பூஜை, கந்தாதிவாஸ் சடங்குகள் நடைபெற உள்ளது. நாளை 19ம் தேதி கேசராதிவாஸ், கிருதாதிவாஸ் ஔஷததிவாஸ் போன்ற சடங்குகளும் நடைபெறுகின்றன. அன்று மாலை, தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறும். 20ம் தேதி காலை ஷர்கராதிவாஸம், பலாத்வாஸ் சடங்குகளும், மாலையில் புஷ்பதீபம் நடக்கவுள்ளன. 21ம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிவாஸமும் சடங்குகளும் நடைபெறவுள்ளன. உலகமே எதிர்பார்க்கும் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது.